Advertisment

அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் 2 இளம் சிறார்கள் கைதிகள் தப்பியோட்டம்!

2 young juvenile prisoners escaped from the Government Security Home

வேலூர்காகிதப்பட்டறையில்தமிழ்நாடு அரசு குழந்தைகள் நலன் மற்றும்சிறப்புச்சேவைகள் துறையின் கீழ் அரசினர் பாதுகாப்பு இடம் செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடும் 18 வயது முதல் 21 வயது உடையோர் வைக்கப்பட்டுள்ளனர். தற்போது முப்பது பேர் உள்ள நிலையில் இரண்டு பேர் தப்பி ஓடிஉள்ளதாகத்தகவல். தப்பியோடி அவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Advertisment

வழக்கம்போல இன்று மாலை வேளையில் இளம் சிறார்கள் பாதுகாப்பு இடத்தில் உள்ளகலியானஇடத்தில் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். அப்போதுவிருத்தாசலம்பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்சிறார் மற்றும் கோவையைச் சேர்ந்த 18 வயது இளம் சிறார் ஆகிய இருவரும் சுவர்ஏறிக்குதித்துத்தப்பிச் சென்றுள்ளனர்.

Advertisment

இதுகுறித்து அரசினர் பாதுகாப்பு இடத்தின் கண்காணிப்பாளர்காவல்துறைக்குத்தகவல் அளித்துள்ளார். அதன் பேரில் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலையபோலீசார்பாதுகாப்பு இடத்தில் விசாரணை நடத்தினர்.

மேலும் தப்பியோடிய இரு இளம்சிறார்களைப்பிடிக்க வேலூர் புதிய பேருந்து நிலையம், வேலூர் பழைய பேருந்து நிலையம் மற்றும் காட்பாடி ரயில் நிலைய சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில்போலீசார்தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கெனவே கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இதே அரசினர் பாதுகாப்புஇடத்திலிருந்து6 பேர் தப்பியோடி மீண்டும்பிடித்துப்பாதுகாப்பு இடத்தில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

police Prisoners Vellore
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe