லஞ்சம் வாங்கிய வருவாய் கோட்டாட்சியருக்கு 2 ஆண்டு கடுங்காவல் தண்டனை

2 years rigorous imprisonment for bribe Revenue Commissioner

சிதம்பரம் வருவாய் கோட்டாட்சியராக கடந்த 2008-ஆம் ஆண்டு பணிபுரிந்த குழுந்தைவேல் விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை எலவானாசூர் கோட்டையை சேர்ந்த ஷம்சுதின்ராவுத்தர் மகன் சிராஜூதின் ஜல்லி ஏற்றிக்கொண்டு வந்த டிப்பர் லாரியை விடுவிக்க ரூ.5,000 லஞ்சம் கேட்டுள்ளார். இது தொடர்பாக சிராஜூதின் என்பவர் கடலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் கொடுத்தார். இதனைதொடர்ந்து கடந்த 2008-ஆம் ஆண்டு ஜன 22-ந்தேதி சிதம்பரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சிராஜூதின் என்பவரிடம் குழந்தைவேல் ரூ.5,000 லஞ்சம் பெற்ற போது கைது செய்யப்பட்டார்.

கடலூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் துணை சட்ட ஆலோசகர் பாலரேவதி அரசு தரப்பில் வழக்கு நடைபெற்று வந்தது. கடலூர் தலைமை நீதித்துறை நடுவர் மற்றும் சிறப்பு நீதிபதி பிரபாகரன் விசாரணை முடிவில் லஞ்சம் வாங்கிய சிதம்பரம் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைவேல்( 72) குற்றவாளி என தீர்ப்பளித்து அவருக்கு ஊழல் தடுப்பு சட்டம், 1988 ன் கீழ் 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தது.அபராதம் கட்டத் தவறினால் 5 மாதம் காலம் மெய்காவல் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

Bribe Chidambaram police
இதையும் படியுங்கள்
Subscribe