Advertisment

லஞ்சம் கேட்ட வி.ஏ.ஓ; 2 ஆண்டு சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்

2 years jail for vao who took bribe Vriddhachalam

Advertisment

சான்றிதழ்கள் வழங்க 1200 ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள தெற்கிருப்பு கிராமத்தைச்சேர்ந்த குமரவேல் என்பவர் கடந்த 2008_ஆம் ஆண்டு தனக்கு வருமானம் மற்றும் சாதி சான்றிதழ் வேண்டி விண்ணப்பித்திருந்தார். அப்போது கிராம நிர்வாக அலுவலராக இருந்த சீனிவாசன் என்பவர் சான்றிதழ் வழங்க குமாரவேலிடம் 1500 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத குமரவேல் கடலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து கடந்த 21.10.2008 அன்றுகிராம நிர்வாக அலுவலர் சீனிவாசனைக் கைது செய்தனர். மேலும் கடலூர் தலைமை நீதித்துறை நடுவர் மன்றத்தில் அவர் மீது வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் நீதிபதி பிரபாகரன் தீர்ப்பு கூறினார். அவர் தனது தீர்ப்பில், ' சீனிவாசன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 2 ஆண்டுகள் சிறைதண்டனையும் 2000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

VAO jail Cuddalore
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe