Advertisment

கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை; பெற்றோர் செயலால் அதிர்ந்த போலீசார்

A 2-year-old child who fell into a well; Cops shocked by parents action

Advertisment

மதுரையில் இரண்டு வயது குழந்தை கிணற்றில் விழுந்து உயிரிழந்த நிலையில் போலீசாருக்கு தெரியாமல் பெற்றோர்களே அடக்கம் செய்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பகுதியில் வசித்து வருபவர் பிரசாத். இவருக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் வீட்டின் வெளிப்புறத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை நாய் துரத்தியுள்ளது. இதனால் பயத்தில் ஓடிய குழந்தை வீட்டுக்கு அருகிலேயே உள்ள இருந்த திறந்தவெளி கிணற்றில் விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதில் குழந்தை உடலை மீட்டபெற்றோர்உடலை அடக்கம் செய்தனர். ஆனால் விபத்தில் உயிரிழந்த குழந்தை உயிரிழந்தது குறித்து கிராம நிர்வாக அலுவலரிடம் எந்த தகவலும் கொடுக்காமல் குழந்தையை அடக்கம் செய்ததாக போலீசாருக்கு தகவல் கிடைக்க சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மற்றும் வட்டாட்சியர் விசாரணை நடத்தினர்.

மேலும் குழந்தையின் உடலைத் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து இந்த சம்பம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Alanganallur child madurai police
இதையும் படியுங்கள்
Subscribe