A 2-year-old child passed tirunelveli Hospital and his parents are missing

சுயநினைவற்ற நிலையில்இருந்த 2 வயது குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்து விட்டு பெற்றோர்காணாமல் போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

சென்னை பள்ளிப்பட்டு பகுதியைச்சேர்ந்த சக்திவேல் என்பவர் மனைவி ஹேமலதாவுடன்தென்காசி மாவட்டத்தில் வசித்து வந்தார். இவர்களுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.இந்நிலையில், கடந்த 31 ஆம்தேதி குழந்தைதவறி விழுந்துவிட்டதாகக் கூறிஆலங்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில்,குழந்தைக்கு நினைவு திரும்பாததால்நெல்லை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது.

Advertisment

அதன்பிறகு குழந்தைக்கு கடந்த நான்கு நாட்களாக தீவிர சிகிச்சை அழைத்து வந்த நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இதனிடையே, குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்த பெற்றோரை காணவில்லை. இதுகுறித்துபோலீசார் விசாரணை நடத்திவந்த நிலையில், குழந்தை தற்போது உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.