Advertisment

தண்ணீர் தொட்டில் மூழ்கி 2 வயது குழந்தை உயிரிழப்பு... ஊத்தங்கரையில் சோகம்

 A 2-year-old child drowned in a water cradle... Tragedy in Uthangarai

கிருஷ்ணகிரி அருகே இரண்டு வயது ஆண் குழந்தைதண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை காவல் நிலையத்தைஅடுத்த கிராமம் ஒன்றில் வசித்து வந்த சசிராஜ்-அகிலாஆகியோரின் இரண்டு வயது குழந்தை சுதர்சன். இன்று குழந்தை சுதர்சன் பக்கத்து வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் திறந்து கிடந்ததண்ணீர் தொட்டியில் தவறி விழுந்துள்ளான். வெகு நேரம் கழித்துஇதனை கண்டு அதிர்ந்தஅக்கம்பக்கத்தினர்உயிருக்கு போராடிக் கொண்டிருந்த குழந்தையை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் மருத்துவர்கள் பரிசோதித்ததில் குழந்தை ஏற்கனவே இறந்ததுதெரியவந்தது. தண்ணீர் தொட்டியில் மூழ்கி குழந்தைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வரும் நிலையில் அலட்சியத்தால் இரண்டு வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் ஊத்தங்கரையில்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

incident uthangarai Krishnagiri
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe