Advertisment

ஒரே பதிவெண்ணில் 2 வேன்கள்; நூதன முறையில் பல ஆயிரம் லிட்டர் பால் திருட்டு

2 vans in the same registration; theft of thousands of liters of milk in a modern way

Advertisment

வேலூர் சத்துவாச்சாரியில் செயல்பட்டு வருகிறது ஆவின் பால் பண்ணை. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மூன்று மாவட்ட விவசாயிகளிடமிருந்து நாள் ஒன்றுக்கு சுமார் 1 லட்சத்து 10 ஆயிரம் லிட்டர் பால் பெறப்பட்டு பால் பாக்கெட்டுகள் தயார் செய்யப்பட்டு சுமார் 600 முகவர்களுக்கு 20 ஒப்பந்த வாகனங்கள் மூலம் அனுப்பப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

ஆவின் பால் பண்ணையில் அடிக்கடி பால் திருட்டு சம்பவங்கள் நடப்பதாக சர்ச்சைகள் ஏற்படுவதுண்டு. இந்நிலையில் கடந்த 1ம் தேதி முதல் பால் பாக்கெட்டுகளை ஆவின் பண்ணையிலிருந்து முகவர்களுக்கு வாகனம் மூலம் விநியோகம் செய்ய ஒப்பந்ததாரர் நியமிக்கப்பட்டார். கடந்த சில நாட்களாக உற்பத்தி செய்யப்படும் பால் பாக்கெட்டுக்கும் விற்பனை செய்யப்படும் பாலுக்கும்வித்தியாசம் இருப்பது அதிகாரிகளுக்கு தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். ஜூன் 5 ஆம் தேதி மதியம் பால் பாக்கெட்டுகள் ஏற்றிச் செல்ல பல பால் வேன்கள் பாலகத்தின் உள்ளே வந்தது. உள்ளே வந்த வாகன எண்களை ஆவின் காவலாளி பதிவேட்டில் எழுதினார். அதனை சரி பார்த்தபோது ஒரே வாகன எண்ணில் இரண்டு வண்டிகள் உள்ளே சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அவர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதிகாரிகள் விரைந்து வந்து பார்த்த போது TN 23 AC 1352 என்ற ஒரே எண்ணில் இரண்டு வேன்கள் பல ஆயிரம் மதிப்புள்ள பாக்கெட் பாலை ஏற்றிக் கொண்டு புறப்படத்தயார் நிலையில் இருந்தன. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் இரண்டு வேன்கள் மற்றும் பால் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

Advertisment

இந்த நுாதன பால் திருட்டு சம்பவம் குறித்து ஆவின் அதிகாரிகள் கூறும் போது, ஒரே வாகன எண்ணில் பால் ஏற்றிச் செல்ல இருந்த 2 வேன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து வட்டாரப் போக்குவரத்து அதிகாரியிடம் புகார் செய்துள்ளோம். இரண்டு வேன் உரிமையாளர்களிடமும் வாகனத்தின் ஆவணங்களை எடுத்து வரச் சொல்லியுள்ளோம். விசாரணையின் முடிவில் இந்த சம்பவம் பால் திருட்டுக்காக நடந்ததாஅல்லது வேறு காரணமா என்ற முழுமையான உண்மை நிலவரம் தெரியவரும் என தெரிவித்தனர்.

Theft milk Vellore
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe