Skip to main content

'2 டன்' அரிசி சிப்பங்கள் பறிமுதல்! - தப்பிய அரிசி மாஃபியாக்கள்!

Published on 03/03/2021 | Edited on 03/03/2021

 

2 ton rice packs confiscated rice mafias escaped

 

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு வட்டம், மசிகம் கூட்ரோடு அருகே ஒரு இடத்தில் பல மூட்டைகள் இருப்பதாக பேரணாம்பட்டு வட்ட வழங்கல் அலுவலருக்குத் தகவல் கிடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து, மார்ச் 2 ஆம் தேதி, இரவு 8.30 மணிக்கு அதிகாரிகள் அங்கு சென்று பார்வையிட்டனர்.

 

நேரில் சென்று சோதனையிட்டபோது, அது நியாயவிலைக் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் விலையில்லா அரிசி மூட்டைகள் என்பது தெரியவந்தது. கணக்கெடுத்ததில் 35 சிப்பங்கள் இருப்பது தெரியவந்தது. அதன் மொத்த எடை 1,953 கிலோ என்பதும் தெரியவந்தது. அதனைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், மார்ச் 3 ஆம் தேதி குடியாத்தத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் ஒப்படைத்தனர். அந்த அரிசி சிப்பங்களை அங்கு கொண்டு வந்தது யார்? எங்கு அனுப்ப அங்கு வைத்திருந்தார்கள்? என விசாரணை நடத்திவருகின்றனர் அதிகாரிகள்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

கட்டுக்கட்டாக சிக்கிய பணம்; வாக்காளர்களுக்கு வழங்க எடுத்துச் செல்லப்பட்டதா?

Published on 24/11/2023 | Edited on 24/11/2023

 

Bonded money; Carried away to deliver to voters? in hyderabad

 

தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் தேர்தல் தேதியைக் கடந்த அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி அன்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பிருந்தே இந்த ஐந்து மாநிலங்களிலுமே அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தங்கள் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வந்தனர். சில இடங்களில் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

 

அதன்படி, ராஜஸ்தான் மாநிலத்தில் வருகிற நவம்பர் 25 ஆம் தேதியும், தெலுங்கானா மாநிலத்தில் 30 ஆம் தேதியும் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று டிசம்பர் 3 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தெலுங்கானா மாநிலத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதே வேளையில், வாக்காளர்களுக்குப் பணம், பரிசுப் பொருட்கள், மது போன்ற பொருட்களை வழங்குவதை தடுக்க தேர்தல் படை அதிகாரிகள் தீவிர சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

 

அந்த வகையில், தலைநகர் ஐதராபாத்தின் கச்சிபவுலி பகுதியில் பறக்கும் படை காவல்துறையினர் நேற்று (23-11-23) தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் ஒன்றை போலீஸார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அந்த வாகனத்தில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுக்கள் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த போலீஸார் அந்த பணத்தைக் கைப்பற்றினர். அப்போது அதில், ரூ.5 கோடி இருந்தது தெரியவந்தது. மேலும், இது தொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில், அந்த பணம் ஒரு வர்த்தக நிறுவனத்துக்கு சொந்தமானது என்பதும் தெரியவந்தது. 

 

 

Next Story

ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்; தமிழக அரசு அதிரடி

Published on 05/08/2023 | Edited on 05/08/2023

 

ஐபிஎஸ் அதிகாரிகள் 33 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக உள்துறை செயலாளர் அமுதா உத்தரவிட்டுள்ளார்.

 

அதன்படி, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த எஸ்.பி. ஸ்ரீநாதா, டிஜிபி அலுவலக உதவி ஐ.ஜி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சேலம் எஸ்.பி.யாக இருந்த சிவகுமார், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி.யாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி எஸ்.பி.யாக இருந்த சுஜித்குமார் மதுரை தெற்கு அமலாக்கப் பிரிவு எஸ்.பி.யாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மதுரை தெற்கு மண்டல அமலாக்கப் பிரிவு எஸ்.பி.யாக இருந்த வருண் குமார், திருச்சி மாவட்ட எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 

சென்னை தியாகராய நகர் துணை ஆணையராக இருந்த அருண் கபிலன், சேலம் எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அடையாறு துணை ஆணையர் மகேந்திரன், சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை தெற்கு போக்குவரத்து காவல்துறை துணை ஆணையராக மகேஷ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தாம்பரம் துணை ஆணையர் அதிவீரபாண்டியன், நாகை கடலோர பாதுகாப்புப் படை எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர்கள் உட்பட மொத்தம் 33 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.