Skip to main content

"அனைவரையும் திருப்திப்படுத்தும் வகையில் கணக்கீடு"- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேட்டி!

Published on 26/06/2021 | Edited on 26/06/2021

 

+2 students marks tamilnadu education minister pressmeet

தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கீடு முறை குறித்த அறிவிப்பை தமிழக அரசு இன்று (26/06/2021) வெளியிட்டது.

 

இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "கிராமப்புற மாணவர் உட்பட அனைவரையும் திருப்திப்படுத்த ஏதுவாக கணக்கீடு முறைத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மதிப்பெண் கணக்கிடுவது தொடர்பாக அமைத்தக் குழு பரிந்துரைப்படி பிளஸ் 2 மதிப்பெண் அறிவிக்கப்படும். கரோனாவுக்கு முன் மாணவர்கள் பள்ளியில் 10- ஆம் வகுப்பு தேர்வை எழுதியதால் 50% மதிப்பெண் கணக்கீடு செய்யப்படும்.

 

கல்விக் கட்டணம் செலுத்தவில்லை என ஆன்லைன் வகுப்பில் மாணவர்களை அனுமதிக்காவிடில் நடவடிக்கை எடுக்கப்படும். பிளஸ் 1-ல் இருந்து 20%, பிளஸ் 2-ல் இருந்து 30% மதிப்பெண்கள் கணக்கிடப்படுகின்றன. மதிப்பெண் போதாது, தேர்வு எழுத வாய்ப்பு வழங்குகள் என்கின்ற மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படும். தேர்வெழுத விருப்பப்படும் மாணவர்களுக்கு கரோனா தொற்று முடிந்தப் பின் தேர்வு நடத்தப்படும்" எனத் தெரிவித்தார். 
 

சார்ந்த செய்திகள்