2 personal to catch former minister Manikandan

Advertisment

துணை நடிகை அளித்த பாலியல் புகார் தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

துணை நடிகை அளித்த பாலியல் புகார் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் வன்கொடுமை உட்பட 6 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. அதேபோல் முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் முன்ஜாமீன் மனுவும்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. இதற்கிடையில் மணிகண்டன் எங்கு இருக்கிறார் என்பது தொடர்பாக தேடுவதற்கு இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, மதுரையில் அவர்பதுங்கியிருக்கலாம் என்று தகவல் வெளியான நிலையில், தனிப்படை போலீசார் அங்கு சென்று போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் இந்த வழக்கில் ஆதாரங்களைத் திரட்டும் பணியிலும் காவல்துறையினர் தீவிரம் காட்டிவருகின்றனர்.

Advertisment

ஏற்கனவே இந்தப் புகார் தொடர்பாக முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் மனைவி ராமநாதபுரத்தில் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் மனு அளித்திருந்தார். அதில், பணத்திற்காகவும் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக பொய்யான புகாரை துணை நடிகை தெரிவித்துள்ளதாக தெரிவித்திருந்தார். அந்தப் புகார் அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டது. அந்தப் புகார் தற்போதுவரை நிலுவையில் உள்ள நிலையில், தற்போது முன்னாள் அமைச்சர் மணிகண்டனை போலீசார் தேடிவருகின்றனர்.