Advertisment

கடலில் குளித்த 2 பேர் உயிரிழப்பு; காணும் பொங்கல் தினத்தில் நேர்ந்த சோகம்!

 2 people who bathed in the sea lost their lives in chidambaram

Advertisment

சிதம்பரம் அருகே வரகூர்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன கிருஷ்ணன். இவரும், ஜெகன் என்பவரும் சிதம்பரம் அருகே உள்ள கொடியம்பாளையம் கடலில் காணும் பொங்கலையொட்டி நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அலையின் சீற்றம் அதிகமாக இருந்ததால்அலையில் சிக்கி திடீரென காணாமல் போனார்கள். இதனை அறிந்த அருகில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் இவர்களை தேடினர். ஆனால் இவர்கள் கிடைக்கவில்லை.மோகன கிருஷ்ணன் உடல் 2 மணி நேரத்திற்கு பிறகு அதே பகுதியில்கரை ஒதுங்கியது.இதில் ஜெகன் உடல் கிடைக்கவில்லை.

மீனவர்கள் உதவியுடன் அவரது உடலை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். காவல்துறையினர் கரை ஒதுங்கிய உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு சீர்காழி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.காணும் பொங்கலில் கடலில் குளித்த போது 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.காணும் பொங்கலுக்காக கடலுக்குச் சென்றவர்கள் இந்த சம்பவத்தை அறிந்து கலை இழந்து திரும்பி சென்றனர்.

police incident Chidambaram
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe