Advertisment

மளிகை கடைகளில் புகையிலை பொருட்களை விற்ற 2 பேர் கைது

2 people were arrested for selling tobacco products in grocery stores

ஈரோட்டில் மளிகைகடையில் புகையிலை பொருட்களை விற்ற இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Advertisment

ஈரோடு தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் மோகனசுந்தரி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஈரோடு பூந்துறை ரோடு அருகே உள்ள ஒரு மளிகை கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைபொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அந்த மாளிகை கடையில் சோதனையில் ஈடுபட்ட போது 6 ஹான்ஸ் பாக்கெட்டுகள் விற்பனைக்கு வைத்திருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

Advertisment

இதனைத் தொடர்ந்து அந்த கடையின் உரிமையாளர் ஈரோடு செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த சசிமலர் (40) என்பவரை கைது செய்தனர். இதைப்போல் ஈரோடு வெள்ளாளபாளையம் பகுதியில் போலீசார் ஒரு மளிகை கடையில் சோதனை செய்தபோது அந்த கடையிலும் 6 ஹான்ஸ் பாக்கெட்டுகள் விற்பனைக்குவைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர். கடையின் உரிமையாளரான திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தைச் சேர்ந்த சிலம்பரசன் (30) என்பவரை கைது செய்தனர். இரண்டு கடைகளில் இருந்தும் ஹான்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Erode kutka police
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe