Advertisment

புதுமண தம்பதி படுகொலை; தூத்துக்குடியை உலுக்கிய வழக்கில் 2 பேர் சரண்

2 people surrendered in the case that married couple rocked Tuticorin

Advertisment

தூத்துக்குடி முருகேசன் நகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வசந்தகுமாரின் மகன் மாரிசெல்வம்(22). இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். மாரிசெல்வமும், திருவிக நகரைச் சேர்ந்த பால் வியாபாரியான முத்துராமலிங்கத்தின் மகள் கார்த்திகாவும் காதலித்து வந்துள்ளனர். ஆனால் இதற்குப் பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததால், இருவரும் கடந்த 30 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த பெண்வீட்டார் மாரிசெல்வத்தின் வீட்டிற்கு வந்து கோபத்துடன் பேசிவிட்டுச் சென்றுள்ளனர். இந்த நிலையில்தான் நேற்று முன்தினம்(2.11.2023) இரவு மாரிசெல்வம் வீட்டிற்குள் வந்த மர்ம கும்பல், காதல் திருமணம் செய்துகொண்ட இருவரைச் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துவிட்டுத் தப்பிச் சென்றது. இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இருவரது உடலையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், காதல் திருமணம் செய்து கொண்டதால் இருவரையும் பெண்வீட்டார் ஆட்களை ஏவி கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது. இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், பொருளாதார ரீதியாக மாரிசெல்வம் பின்தங்கி இருந்ததால், திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இக்கொலையை அரங்கேற்றியதை போலீசார் கண்டுபிடித்தனர்.

Advertisment

தலைமறைவாக உள்ளவர்களைப் பிடிக்க 3 தனிப்படைகளை அமைத்துத்தேடி வந்த போலீசார், நேற்று கார்த்திகாவின் தந்தை முத்துராமலிங்கத்தை கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து நேற்று இரவுஒரு சிறார் உள்பட மூன்று பேரையும் போலீசார் கைது செய்த நிலையில் இன்று கருப்பசாமி, பரத் ஆகிய இருவரும் வள்ளியூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர். காதல் தம்பதியினர் கொல்லப்பட்ட வழக்கில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் தொடர்புடையவர்கள் குறித்து போலீசார் தேடி வருகின்றனர்.

police lovers Thoothukudi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe