Advertisment

போதையில் நடந்த கோர விபத்து; மாணவர் உள்பட 2 பேர் பரிதாபமாக பலி

2 people, including a student, passed away  in a car accident in Annanagar

சென்னை அண்ணாநகரில் நள்ளிரவில் அதிவேகமாகச் சென்ற கார் ஒன்று சாலையின் தடுப்பை மீறி சாலையோரம் நின்றிருந்தவர்கள் மீது மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் தூய்மை பணியாளர்கள், சூப்பர் மார்க்கெட்டின் பாதுகாவலர் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

Advertisment

விபத்து குறித்து தகவலின் பேரில் வந்த போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சை பெற்றுவரும் 6 பேரில் 2 பேரின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். காரில் வந்த மூன்று பேரில் இரண்டு பேர் தப்பிச் சென்ற நிலையில் ஒருவரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம் நடத்திய விசாரணையில் கஞ்சா போதையில் காரை இயக்கியதே விபத்திற்குக் காரணம் என்று தெரியவந்துள்ளது. விபத்திற்குள்ளான காரையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Advertisment

இந்த நிலையில் மருத்துவமனையில் கவலைக்கிடமாக இருந்த இரண்டு பேர் தற்போது உயிரிழந்துள்ளனர். தனியார் பல்கலைகழகத்தில் படிக்கும் மாணவர் விஜய் யாதவ் மற்றும் சூப்பர் மார்க்கெட் காவலாளி நாகசுந்தரம் இருவரும் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. மேலும் படுகாயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

police student
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe