தஞ்சாவூர் மாவட்டம் திருச்சிற்றம்பலம் காவல் நிலைய ஆய்வாளர் சேரன். இவரது சொந்த ஊர் திருச்சி மாவட்டம். நேற்று சொந்த ஊருக்குச் சென்றவர் புதுக்கோட்டை, வடகாடு வழியாகக் காவல் நிலைய வாகனத்தில் திருச்சிற்றம்பலம் சென்றுள்ளார். வாகனத்தை காவலர் முருகன்(34) ஓட்டியுள்ளார்.
கார் அணவயல் கிராமத்திற்கு அருகே செல்லும் போது எதிரே கல் இறக்கிவிட்டு அதிவேகமாக வந்த வாகனம் போலீஸ் வாகனம் மீது மோதிய விபத்தில் காவல் ஆய்வாளர் சேரனுக்கும் எதிரே வாகனம் ஓட்டி வந்த அன்னவாசல் பகுதியைச் சேர்ந்த சோலைமுத்து (44) ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. வாகனங்களும் சேதமடைந்தது. அக்கம் பக்கத்தினர் இவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வடகாடு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.