2 people are concerned in the road accident in Anna Nagar

சென்னை அண்ணாநகரில் நள்ளிரவில் அதிவேகமாகச் சென்ற கார் ஒன்று சாலையின் தடுப்பை மீறி சாலையோரம் நின்றிருந்தவர்கள் மீது மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் தூய்மை பணியாளர்கள், சூப்பர் மார்க்கெட்டின் பாதுகாவலர் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

Advertisment

விபத்து குறித்து தகவலின் பேரில் வந்த போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சை பெற்றுவரும் 6 பேரில் 2 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisment

காரில் வந்த மூன்று பேரில் இரண்டு பேர் தப்பிச் சென்ற நிலையில் ஒருவரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம் நடத்திய விசாரணையில் மது போதையில் காரை இயக்கியதே விபத்திற்குக் காரணம் என்று தெரியவந்துள்ளது. விபத்திற்குள்ளான காரையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.