Advertisment

கார் விபத்து; சம்பவ இடத்திலேயே பறிபோன 2 உயிர்!

2 passed away in car accident near bhuvanagiri

புவனகிரி அருகே வண்டுராயன்பட்டு பேருந்து நிறுத்தம் அருகே லாரிஒன்று நின்று கொண்டிருந்தது. இந்த நிலையில் இன்று (வெள்ளி) அதிகாலை திருப்பத்தூர் மாவட்டம் ஆதியூர் கிராமத்தில் இருந்து சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வழிபட காரில் அதே ஊரைச் சேர்ந்த தருண்ராஜ்(19) பரிமளா(42) பழனிவேல்(44) விக்கி(28) ஓட்டுநர் ஆகிய 4 பேரும் வந்துகொண்டிருந்தனர்.

Advertisment

கார் வண்டுராயன்பட்டு பேருந்து நிறுத்தம் அருகே வரும்போது நிலை தடுமாறி எதிர்பாராத விதமாக எதிரே நின்று கொண்டிருந்த லாரிமீது அதிவேகமாக மோதியதில் காருக்கு பலத்த சேதம் ஏற்பட்டது. இதில் பயணம் செய்த பரிமளா மற்றும் தருண்ராஜ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். பின்னர் இவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 அவசர ஊர்தி மூலம் சிதம்பரம் ராஜாமுத்தையா கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதிகாலையில் நின்றுக்கொண்டிருந்த லாரி மீது கார்மோதிக் கொண்டு இருவர்பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Advertisment

police
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe