Advertisment

வருண்குமார் எஸ்.பி குறித்து அவதூறு கருத்து; மேலும்  2 பேர் கைது!

2 more people were arrested for defaming Varunkumar SP

திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்து வருபவர் வருண்குமார். இவரது மனைவி வந்திதா பாண்டே. இவர் புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வருகிறார். இவர்கள் குறித்தும், இவர்களது குடும்பம் குறித்தும் சிலர் சமூக வலைதளங்களில் தொடர்ந்து அவதூறு பரப்பி வருகின்றனர். இதுதொடர்பாக திருச்சி சைபர் கிரைம் போலீசார் 51 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களில் ஏற்கனவே 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisment

இந்நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய மதுரை விஸ்வநாதபுரம் தபால் தந்தி நகரை சேர்ந்த அப்துல் ரகுமான் (22), கள்ளக்குறிச்சி களமருதூர் தெற்கு தெருவை சேர்ந்த சண்முகம்(34) ஆகியோரை தில்லைநகர் போலீசார் கைது செய்து, திருச்சி மத்தியச் சிறையில் அடைத்தனர். எஸ்பி அருண்குமார் மற்றும் அவரது குடும்பம் குறித்து அவதூறு பேசியதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisment
trichy seeman
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe