'2 memorial halls for Muthuramalinga Devar'- Chief Minister's announcement

Advertisment

முத்துராமலிங்க தேவருக்கு நினைவு மண்டபம் கட்டப்படும் எனத்தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தின் முகப்பில் பொதுமக்கள் பாதுகாப்பாக அஞ்சலி செலுத்தும் வகையில்,1.43 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மணிமண்டபம் கட்டப்படும். மிக முக்கியப் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் மற்றொரு மண்டபம் 12.54 லட்சம் ரூபாய் மதிப்பில்கட்டப்படும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 1.55 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு மண்டபங்கள் தமிழ்நாடு அரசால் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் தேவர் குருபூஜை நடைபெற உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தகுந்தது.