z

Advertisment

தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த 2 சிறுமிகளின் குடும்பத்தாருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிறுமிகளின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

ராசிபுரம் அடுத்த அத்திபலகானூர் பகுதியில் உள்ள மழைநீர் குட்டையில் மூழ்கி அதே பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும் ஜனனி, ரத்னா ஸ்ரீ என்ற 2 சிறுமிகள் உயிரிழந்துள்ளனர். இதுதொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். தவறி விழுந்தார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் உயிரிழந்து சிறுமிகளுக்கு தலா இரண்டு லட்சம் நிதியுதவி அளித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.