நேற்று இரவு முதலே சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை பொழிந்து வரும் நிலையில் கன மழையினால் பல்வேறு இடங்களில் சாலைகளில் நீர் தேங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் வீட்டிற்குள் வெள்ளநீர் புகுந்துள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சிறிது நேரத்திற்குப் பிறகு சென்னையில் மீண்டும் மழை துவங்கியுள்ளது.
இந்நிலையில் தொடர் கனமழை காரணமாகச் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 4 மாவட்டங்களில் நாளையும், நாளை மறுநாளும் பள்ளி, கல்லூரிகள் இயங்காது எனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதேபோல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடுவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களே முடிவு செய்யலாம் எனத் தமிழக அரசு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது