Advertisment

சென்னையில் 2 நாட்கள் மின்சார ரயில்கள் ரத்து!

rayil

சென்னை - திருத்தணி மார்க்கத்தில் நாளை மற்றும் நாளை மறுதினம் 24 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Advertisment

வியாசர்பாடி - ஆவடி இடையே பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுகின்றன. நாளை காலை 9.50 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுகின்றன. நாளை மறுநாள் காலை 9.50 மணி முதல் மாலை 4.20 மணி வரை ரயில்சேவை ரத்து ஆகின்றன.

Advertisment

இதே போல் சென்னை கடற்கரை - வேளச்சேரி மார்க்கத்தில் பராமரிப்பு பணி காரணமாக நாளை மற்றும் நாளை மறுநாள் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன.

அவ்வப்போது சிறப்பு மின்சார ரயில் இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Chennai canceled electric trains
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe