Advertisment

தூய்மைப் பணியாளர் பாட்டிக்கு 2 கோடி ரூபாய் ஜிஎஸ்டி பாக்கி; இடியை இறக்கிய வணிகவரித்துறை

gst

ஆம்பூரில் தூய்மை பணியாளராக பணியாற்றி வரும் மூதாட்டி ஒருவருக்கு 2 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி பாக்கி செலுத்த வேண்டும் என வணிகவரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கிருஷ்ணாபுரம் பகுதியில் வசித்து வருபவர் ராணி பாபு என்கிற மூதாட்டி. வாடகை வீட்டில் வசித்து வரும் இவர் தோல் தொழிற்சாலை ஒன்றில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். அவருடைய மகனும் அதேபோல் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த வாரம் ராணி பாபு வீட்டிற்கு கடிதம் ஒன்று வந்தது. அந்த கடிதத்தில் திருச்சிராப்பள்ளியில் 'மாடர்ன் என்டர்பிரைசஸ்' எனநடத்தி உங்கள் நிறுவனத்திற்கான ஜிஎஸ்டி வரி பாக்கி இரண்டு கோடியே 39 லட்சத்து 87 ஆயிரத்து 24 ரூபாயை செலுத்த வேண்டும் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisment

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மூதாட்டி என் மகன் தாங்களே அன்றாடம் காட்சியாக தொழிற்சாலையில் வேலை செய்து வாழ்ந்து வரும் நிலையில் ஜிஎஸ்டி வரி பாக்கி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். 'நானும் எனது அம்மாவும் தொழிற்சாலையில் வேலை செய்து வாழ்ந்து வருகிறோம். இரண்டு பேருமே கம்பெனிக்கு போனால்தான் வழக்கை.எனக்கு பத்தாயிரம் ரூபாய் அம்மாக்கு ஒரு பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வரும். இதில் இரண்டு கோடி ரூபாய் ஜிஎஸ்டி கட்ட வேண்டும் என்றால் எங்களுக்கு புரியவில்லை' என்றார்.

இந்த நோட்டீஸ் விவகாரம் குறித்துதிருச்சி வணிகத்துறை துணை ஆணையர் கூறுகையில், 'அந்த நிறுவனத்தை போலி பட்டியலில் இணைத்துள்ளதாகவும். நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள மூதாட்டி தங்களுடைய தரப்பை நியாயப்படுத்தும் வகையில் வழக்கு தொடர்ந்து நிரூபிக்க வேண்டும்' என கூறியுள்ளார். ஆம்பூர் பகுதி சீட்டு வசிக்கும் மக்கள் பெரும்பாலும் தோல் தொழிற்சாலைகளில் பணியாற்றி வரும் நிலையில் இப்படி மோசடிகள் அரங்கேறி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனிநபர்களின் ஆதார் எண்கள் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்கள் திருட்டுவதால்இதுபோன்ற மோசடிகள் நடைபெறுவதாக குற்றச்சாட்டுகள் எழும் நிலையில் இதற்குஉரிய தீர்வு வேண்டும் எனவும் சமூகநலஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ambur GST
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe