80 வயது மூதாட்டியிடம் அத்துமீறிய 19 வயது இளைஞர்; பறிபோன உயிர்!

19-year-old youth misbehaves with 80-year-old woman

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த கீழ்விஷாரம் பகுதியில் வசித்துவந்தவர் மூதாட்டி சுசிலா(80) வசித்து வந்தார். இந்த நிலையில் சுசிலாவின் மாங்காய் தோப்பிற்கு கத்தியவாடி பகுதியைச் சேர்ந்த பத்மநாபன் மகன் நந்தகுமார்(19) என்பவர் நேற்று மாலை 5 மணியளவில் வந்துள்ளார். அப்போது போதையில் இருந்த இளைஞர் நந்தகுமார் மூதாட்டியிடம் அத்துமீறி நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் சுசிலாவை பாலியல் வன்கொடுமை செய்யவும் முயன்றிருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த மூதாட்டி கத்தி கூச்சலிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த நந்தகுமார் மூதாட்டியை கீழே தள்ளி தரதரவென இழுத்துச் சென்றுள்ளார். அப்போது உடலில் பல்வேறு இடங்களில் பலத்த ரத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே மூதாட்டி உயிரிழந்திருக்கிறார். இது தொடர்பான சிசிடிவி பதிவு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

80 வயது மூதட்டியை வன்கொடுமை முயற்சி செய்து கீழே தள்ளி தரதரவென இழுத்து சென்ற சம்பவம் சிசிடிவி காட்சி வெளியானதில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Old woman police ranipet
இதையும் படியுங்கள்
Subscribe