Advertisment

இலங்கை சிறையில் இருந்து தமிழகம் திரும்பும் 19 மீனவர்கள் 

19 Tamil Nadu fishermen released from Sri Lankan jails

Advertisment

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 19 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

கடந்த மார்ச் 28ஆம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற நான்கு மீனவர்கள், மார்ச் 30ஆம் தேதி புதுக்கோட்டையில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற 3 மீனவர்கள், ஏப்ரல் 2ஆம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற 12 மீனவர்கள் என மொத்தம் 19 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படை கைது செய்தது. மேலும், அவர்களின் மூன்று விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த வழக்கு ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, 19 பேரையும் நிபந்தனைகளுடன் விடுதலை செய்து நீதிபதி கஜநிதிபாலன் உத்தரவிட்டார். இந்த 19 மீனவர்களும் இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு அங்கிருந்து அவர்கள் தமிழகம் திரும்ப உள்ளார்கள்.

srilanka
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe