ADVERTISEMENT

19 தொழிலாளர்களுக்கு வாந்தி மயக்கம்; என்.எல்.சி.யில் பரபரப்பு! 

04:44 PM Jan 05, 2023 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடலூர் மாவட்டம், நெய்வேலியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் இரண்டாவது சுரங்கத்தில் இன்று காலை 6 மணி ஷிப்டிற்கு வழக்கம் போல் தொழிலாளர்கள் வேலைக்குச் சென்றுள்ளனர். வேலைக்குச் சென்றவர்கள் இரண்டாவது சுரங்கத்தில் உள்ள பழைய கேண்டீனில் காலை உணவு சாப்பிட்டுள்ளனர். காலை உணவாக கேண்டீன் நிர்வாகம் தொழிலாளர்களுக்கு தயிர் சாதமும் வடையும் கொடுத்துள்ளது. அப்போது தொழிலாளர்கள் சாப்பிட்ட தயிர் சாதத்தில் எலி செத்துக் கிடந்ததைக் கண்டு தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் கேண்டீன் நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளனர். அதற்குள் ஏற்கனவே டிபன் சாப்பிட்டு முடித்த தொழிலாளர்கள் 19 பேருக்கு வாந்தி, தலைச்சுற்றல் ஏற்பட்டு கேண்டீன் முன்பு மயங்கி கீழே விழுந்தனர். இதனைப் பார்த்த சக தொழிலாளர்கள் அவர்களை மீட்டு என்.எல்.சி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இச்சம்பவத்தில் இன்கோசர்வ் தொழிலாளர்கள் 10 பேர், சூப்பர்வைசர்கள் 2 பேர், ஒப்பந்த தொழிலாளர்கள் 7 பேர் என 19 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து தொழிலாளர்கள் கூறுகையில், “கோடிக்கணக்கில் லாபம் ஈட்டும் என்.எல்.சி நிர்வாகம், தொழிலாளர்களுக்குத் தரமான உணவுகள் வழங்குவதில்லை. இனிவரும் காலங்களில் தரமான உணவுகள் வழங்க வேண்டும்” எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT