Advertisment

ஊரடங்கிற்கு மத்தியில் 18வது மெகா தடுப்பூசி முகாம்!

18th Mega Vaccine Camp in the middle of the curfew

நாடு முழுவதும் கரோனா பாதிப்பு சில நாட்களாக அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்திலும் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதியான ஞாயிற்றுக்கிழமை முழு முடக்கம் உள்ளிட்ட அறிவிப்புகளை நடைமுறைப்படுத்தி வருகிறது. அதேபோல் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்கள், பக்தர்களுக்கு அனுமதி தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இது ஒருபுறமிருக்கதமிழகத்தில் கரோனா தடுப்பூசி முகாம்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று தமிழகத்தில் 18 கொரோனா மெகா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் மையங்களில் நடைபெற உள்ளது. சென்னையில் உள்ள 200 வார்டுகளில் 1,600 முகாம்கள் மூலம் பொதுமக்களுக்கு தடுப்பூசிகள் போடப்படுகிறது.

Advertisment

TNGovernment VACCINE
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe