
செம்மரக் கட்டைகளைக் கடத்தியதாக ஆந்திர போலீசாரால் தமிழகத்தைச் சேர்ந்த 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலம் புத்தூர் அடுத்த நாராயணவனம் என்ற பகுதியில் ஆந்திர காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்றை மடக்கிப்பிடித்துச் சோதனையிட்டுள்ளனர். அதில் செம்மரக்கட்டைகள் இருப்பதும் தெரியவந்தது. அந்த காரில் வந்த 4 பேரை கைது செய்து நடத்தியவிசாரணையில் அங்குள்ள சதாசிவகோனா என்ற மலைப்பகுதியில் செம்மரக்கட்டைகள் வெட்டி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும், மேலும் அவை வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட இருப்பதாகவும்தெரிவித்தனர்.

இதனையடுத்து செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு ஆந்திர மாநில காவல்துறையினர் தகவல் கொடுத்தனர். உடனே சதாசிவகோனா மலை பகுதிக்குச் சென்ற போலீசார் தேடுதல் வேட்டை நடத்தியதில் 1.5 கோடி ரூபாய்மதிப்பு கொண்ட 298 செம்மரக்கட்டைகள் கண்டறியப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டன. அதோடு மட்டுமல்லாது செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 18 பேரை கைது செய்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)