Advertisment

வீட்டின் பூட்டை உடைத்து 18 சவரன் கொள்ளை; போலீஸ் தீவிர விசாரணை

18 Savaran robbery by breaking the lock of the house in Chidambaram

சிதம்பரம் அருகே உள்ள திடல் மேடு சரோஜினி நகரில் வசிப்பவர் விஜயராகவன்(42). இவர் அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் துறையில் தொழில்நுட்ப உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.இந்நிலையில் இவர் கடந்த29 ஆம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு பணிக்கு சென்றுவிட்டுமாலையில் அவரது மாமனார் வீடான கடலூர் அருகே உள்ள நெல்லிக்குப்பத்திற்கு சென்றுள்ளார்.

Advertisment

பின்பு 30 ஆம் தேதி காலை தனது வீட்டிற்கு விஜயராகவன்வந்துள்ளார். அப்போது வீட்டின்முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டின்உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் பீரோவில் இருந்த 18 பவுன் நகை, ரூ1 லட்சம் பணம் ஆகியவை திருடு போனது தெரிய வந்தது.

Advertisment

உடனே இதுகுறித்து அவர் அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் அண்ணாமலை நகர் காவல் துறையினர் வீட்டின் கதவை உடைத்து பவுன் நகைகளை கொள்ளை அடித்த மர்ம நபர்களைத்தேடி வருகின்றனர்.

Chidambaram police Theft
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe