Advertisment

நடவு பணிக்காகச் சென்ற 22 பெண்கள்; டிராக்டர் கவிழ்ந்து விபத்து

18 people were injured when tractor in which the women  overturned

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த மூதூர் கிராமத்திலிருந்து 22 பெண்கள் நெல் நாற்று நடவு பணிக்காக திருவள்ளூர் மாவட்டம் கனகம்மாசத்திரம் அருகே உள்ள முத்துகொண்டாபுரம் கிராமத்திற்குச் சென்று கொண்டிருந்தனர். டிராக்டரை முத்துகொண்டாபுரத்தைச் சேர்ந்த சரவணன் (29) என்பவர் ஓட்டிச் சென்றார்.

Advertisment

அரக்கோணம் அடுத்த ஆணைப்பாக்கத்தில் இருந்து கோணலம் செல்லும் சாலையில் கன்னியம்மன் கோயில் அருகில் செல்லும்போது அங்குள்ள வளைவில் டிராக்டரை திருப்பும் போது நிலை தடுமாறி கால்வாயில் கவிழ்ந்தது.பக்கத்தில் சேறும் சகதியும் இருந்ததால் பெண்கள் அதில் விழுந்தனர். இதன் காரணமாக கை கால்களில் பலத்த காயங்களுடன் பெண்கள் உயிர்த் தப்பினர். இல்லாவிடில் பெரும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட்டிருக்கும்.

Advertisment

இதுகுறித்து அரக்கோணம் கிராமிய காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் 108 ஆம்புலன்ஸில் 18 பேரையும் மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக மூதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து 4பேரை திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கும், 14 பேர் அரக்கோணம் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து குறித்து டிராக்டர் டிரைவர் சரவணனிடம் கிராமிய காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த விபத்தில் மூதுரைச் சேர்ந்த ஜெயலட்சுமி, வள்ளியம்மாள், முத்தம்மாள், கோடீஸ்வரி, ரேவதி, பூங்கொடி, வசந்தம்மாள், பொன்னியம்மாள், கிரிஜா, சந்திரம்மாள், சித்ரா, இந்திரா உட்பட 18 பேர் காயம் அடைந்தனர்.

ranipet Women
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe