இந்தியாவில் கரோனாவால்பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் 12,750 பேருக்கு கரோனாபாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில்கரோனாவுக்கு420 பேர் பலியாகி உள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில், தேனிஅரசு மருத்துவமனையில் கரோனாவுக்குசிகிச்சை பெற்று வந்தவர்களில் 18 பேர் குணமடைந்தனர்.மார்ச் 31ம் தேதி 23 பேருக்குகரோனாஉறுதி செய்யப்பட்ட நிலையில், 23 பேரில் 18 பேர் தற்போது குணமாகியுள்ளனர்.அதேபோல் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 5 பேர் குணமடைந்துள்ளனர். தஞ்சையில் கரோனாவால்பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கும்பகோணத்தைச் சேர்ந்த ஒரு நபரும்குணம் அடைந்துள்ளார்.