Advertisment

அடைக்கலம் தேடி மேலும் 18 இலங்கைத் தமிழர்கள் தமிழகம் வருகை  

18 more Sri Lankan Tamils seeking refuge in Tamil Nadu

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில் இருந்து ஆபத்தான முறையில் கடல் கடந்து 18 இலங்கைத் தமிழர்கள் தமிழகம் வந்துள்ளனர்.

Advertisment

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், அத்தியாவசியப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. இரண்டு வாரங்களுக்கும் மேலாக இப்போராட்டம் நீடித்து வரும் நிலையில், சிலர் அங்கிருந்து கடல் மார்க்கமாக தமிழகம் வந்த வண்ணம் உள்ளனர்.

Advertisment

ஏற்கனவே 11 குடும்பங்களைச் சேர்ந்த 42 பேர் தமிழகம் வந்துள்ள நிலையில், நேற்று நள்ளிரவு மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 13 பேர் தனுஷ்கோடிக்கும், 5 பேர் சேரான்கோட்டைக்கும் வருகை தந்தனர். ஆபத்தமான முறையில் கடல் கடந்து வந்த அவர்களிடம் கடலோர காவல் படையினரும் கியூ பிரிவு போலீசாரும் விசாரணை நடத்தினர். அதனைத் தொடர்ந்து, அவர்கள் அனைவரும் மண்டபம் இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

srilanka
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe