சென்னை கண்ணகி நகரில் உள்ள ஹாலிடே எனும் தனியார் விடுதியில் தங்கி ஸ்கிம்மர் கருவியின் மூலம் சுமார் 18 லட்சம் ரூபாயை வெளிநாட்டவர்களின் வங்கி கணக்கிலிருந்து திருடி மோசடியில் ஈடுப்பட்ட பல்கெரியா நாட்டை சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisment

18 lakhs theft by Skimmer Tool at ATM ... Three Bulgarians arrested in Chennai !!

சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள ஹாலிடே எனும் நட்சத்திர விடுதியில் தங்கியிருந்தபல்கெரியவை சேர்ந்த நபர்கள் 3 பேர்எதோபுதுவிதமானமின்சாதன பொருட்கள் மட்டுமல்லாமல் வித்தியாசமான பொருட்களை கொண்டுசெல்வதாக கண்ணகி நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்ததின் பேரில் அங்கு சென்று போலீசார் அந்த குறிப்பிட்ட நபர்களின் அறைகளை நேற்று இரவுசோதனையிட்டனர். சோதனையில்சுமார் 70 போலி ஏடிஎம் கார்டுகள், ஸ்கிம்மர் கருவிகள் அவர்களிடம் இருந்துகைப்பற்றப்பட்டது.

Advertisment

18 lakhs theft by Skimmer Tool at ATM ... Three Bulgarians arrested in Chennai !!

அவர்களிடன் நடத்தப்பட்ட விசாரணையில் பல்கேரியநாட்டை சேர்ந்தபோரிஸ், நிக்காலே, லூபோமீர் என சுமார் 30 வயது மதிக்கத்தக்க மூன்றுபேரும் வெளிநாட்டவர்களின் ஏடிஎம் மற்றும் வங்கி விவரங்களை ஸ்கிம்மர் கருமி மூலம்திருடி அதன்மூலம் சுமார் 18 லட்சம் ரூபாயை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து இந்த வழக்கின் தீவிரம் அறிந்து இந்த வழக்கானது மத்திய குற்றப்பிரிவின் வங்கி மோசடி தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டு தற்போது மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி தடுப்புபோலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.