செங்கல்பட்டில் அடித்து நொறுக்கப்பட்ட டோல்கேட்டில் 18 லட்சம் ரூபாய் காணவில்லைஎனடோல்கேட்பொறுப்பாளர் புகார் கொடுத்துள்ளார்.
கடந்த26 ஆம் தேதிசென்னை கோயம்பேட்டில் இருந்து திருநெல்வேலி நோக்கி அரசு பேருந்து நேற்று இரவு புறப்பட்டுச் சென்றது. இந்த பேருந்து செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியை வந்தடைந்த போது, சுங்கச்சாவடி ஊழியர் அரசு பேருந்து ஓட்டுநரிடம் சுங்கக் கட்டணம் கேட்டுள்ளனர். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் இது கைகலப்பாக மாறியது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
இந்த பிரச்சனையால் பரனூர் சுங்கச்சாவடியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பேருந்தில் வெகு நேரம் காத்திருந்த பயணிகள் சுங்கச்சாவடி ஊழியர்களின் செயலால் ஆத்திரமடைந்து, சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கினர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தடியடி நடத்தி கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில்அடித்து நொறுக்கப்பட்ட சுங்கசாவடியில் மொத்தம் இருந்த12 பூத்கள்மற்றும் அலுவலகத்தில் இருந்து மொத்தம் 18 லட்சம் ரூபாயைகாணவில்லைஎனபோலீசாரிடம் புகாரளித்துள்ளனர். டிவி, சேர், கண்ணாடி ஆகியவையும் அடித்து நொறுக்கப்பட்டதாக சுங்கச்சாவடி பொறுப்பாளர் மூலம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
அரசு பேருந்து ஓட்டுநர் தரப்பில் கொடுக்கப்பட்ட புகார், சுங்கச்சாவடி தரப்பில் தற்போது கொடுக்கப்பட்டுள்ள புகார் எனஇரண்டு புகார்களுக்கும்இரண்டு விதமாக முதல்தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த சம்பவத்தில் நான்கு பேர் கைது செய்யப்ட்டுள்ளனர்.