18 IPS Officers transfer of work Tamil Nadu government action order

தமிழகத்தில் 18 ஐ.பி.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக உள்துறை முதன்மைச் செயலாளர் அமுதா வெளியிட்டுள்ள உத்தரவில், “சென்னை மாநகர வடக்கு சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையர் அஸ்ரா கர்க் மாற்றப்பட்டு அப்பொறுப்புக்கு நரேந்திரன் நாயர் நியமிக்கப்படுகிறார். சென்னை மாநகர தெற்கு சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா மாற்றப்பட்டு அப்பொறுப்புக்குக் கண்ணன் நியமிக்கப்படுகிறார்.

Advertisment

தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் மாற்றப்பட்டு அப்பொறுப்புக்கு அபின் தினேஷ் மோதக் நியமிக்கப்படுகிறார். வடக்கு மண்டல ஐஜி நரேந்திரன் நாயர் மாற்றப்பட்டு அப்பொறுப்புக்கு அஸ்ரா கர்க் நியமிக்கப்படுகிறார். தெற்கு மண்டல ஐஜி கண்ணன் மாற்றப்பட்டு, அப்பொறுப்புக்கு பிரேம் ஆனந்த் சின்ஹா நியமிக்கப்படுகிறார். ஜெயராம் ஐபிஎஸ் மாநில குற்ற ஆவண பிரிவு ஏடிஜிபியாக நியமிக்கப்படுகிறார். தாம்பரம் காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் நியமிக்கப்படுகிறார். ஆயுதப்படை ஏடிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமிக்கப்படுகிறார். தமிழ்நாடு காவல்துறை தலைமையிட கூடுதல் டிஜிபியாக வினித் தேவ் வான்கடே நியமிக்கப்படுகிறார். சென்னை தெற்கு மண்டல கூடுதல் ஆணையராக மகேஷ் குமார் அகர்வால் நியமிக்கப்படுகிறார்.

Advertisment

18 IPS Officers transfer of work Tamil Nadu government action order

சிபிசிஐடி ஏடிஜியாக அன்பு நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை கடலோர காவல்துறை பாதுகாப்பு ஏடிஜிபியாக சஞ்சய் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை சைபர் கிரைம் பிரிவு ஏடிஜிபியாக சந்தீப் மிட்டல் நியமிக்கப்பட்டுள்ளார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்களுக்கான இயக்குநராக ராஜீவ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். தொழில்நுட்ப சேவைகள் ஏடிஜிபியாக தமிழ் சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். சேலம் மாநகர காவலர் காவல் ஆணையராக பிரவீன் குமார் அபினபு நியமிக்கப்படுகிறார். ஆயுதப்படை ஐஜியாக விஜயகுமாரி நியமிக்கப்படுகிறார். திருப்பூர் மாநகர காவல் ஆணையராக லட்சுமி நியமிக்கப்படுகிறார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.