Advertisment

சீனாவுக்கு கடத்த இருந்த 18 கோடி மதிப்பிலான நட்சத்திர ஆமைகள் பிடிபட்டது

star

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

புதுக்கோட்டை ரெங்கம்மாள் சத்திரம் பகுதியில் உள்ள ஒரு குடோன் வாசலில் ஒரு கார் வந்து நின்ற சிறிது நேரத்தில் அங்கு வந்த பெங்களுர் போலிசார் ஒரு காரில் வந்து அந்த குடோனுக்குள் நுழைந்து அங்கிருந்த பெங்களுரைச் சேர்ந்த அமீன், புரோக்கான், சையது உள்பட 4 பேரை கைது செய்ததுடன் அவர்களின் காரில் இருந்த பேக்குகளையும் குடோனில் இருந்த பேக்குகளையும் கைப்பற்றி திறந்து பார்த்தனர். அதில் 1487 நட்சத்திர ஆமைகள் இருந்தது.

இந்த ஆமைகள் பெங்களுர்,மற்றும் ஆந்திராவில் உள்ள வனப்பகுதியில் பிடிக்கப்பட்டு ஆந்திரா வழியாக புதுக்கோட்டை யில் உள்ள குடோனில் சேர்த்து வைக்கப்பட்டுள்ள தகவல் அறிந்து பெங்களுர் போலிசார் பின் தொடர்ந்து வந்து பிடித்துள்ளனர்.

Advertisment

இந்த ஆமைகளின் இந்திய மதிப்பு 3 கோடி என்றும் சர்வதேச மதிப்பு ரூ. 15 கோடி என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆமைகள் அடைக்கப்பட்டுள்ள பெட்டிகளை இன்று இரவு ராமேஸவரம் கொண்டு சென்று அங்கிருந்து படகு மூலம் இலங்கை கொண்டு சென்று இலங்கையில் இருந்து கப்பல் மூலம் சீனாவுக்கு கடத்த இருந்ததாகவும் போலிசார் கூறுகின்றனர். பல மாதங்களாக புதுக்கோட்டையில் இந்த ஆமைகள் அடைக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

china crore
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe