18 children rescued through 'Operation Smile 2021' project !!

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்காக ‘ஆப்ரேசன் ஸ்மைல் 2021’என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திடத்தில் தற்போது சென்னை மாநகரம் காவல்துறையினருடன் குழந்தை பாதுகாப்பு அமைப்பு மற்றும் தொழிலாளர் துறை ஆகியவை இணைந்து பிப்ரவரி 1ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை இத்திடத்தில் ஈடுபடவுள்ளது.

Advertisment

இத்திட்டத்தின் மூலம் 2ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை சென்னை ராயபேட்டை, அடையாறு, திருவான்மியூர், நுங்கம்பாக்கம் போன்ற இடங்களில் மேற்கொண்ட ஆய்வுகளில், இதுவரை 18 குழந்தைகள் மீட்கப்பட்டதாகவும், மேலும் இந்த ஆய்வு 15ஆம் தேதி வரை தொடர்ந்து நடைபெறும் எனவும் சென்னை இரண்டாம் வட்ட தொழிலாளர் உதவி ஆணையர் தெரித்துள்ளார்.

Advertisment