
பழங்குடியின மற்றும் பட்டியலின பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகையில் முறைகேடு நடந்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கடந்த 3/12/2021 அன்று வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருவதாக தகவல் வெளியான நிலையில், தற்போது இதுதொடர்பாக கல்லூரி முதல்வர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த 2011 முதல் 2014ஆம் ஆண்டுவரை எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கல்வி உதவித் தொகையில் 17.36 கோடி முறைகேடு நடந்திருப்பதாகப் பெயர் குறிப்பிடப்படாத அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சார்பில் தகவல் வெளியாகியிருந்தது. சுமார் பத்து விதமான முறைகேடுகள் நடந்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்து விசாரணையைத் தொடங்கியது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் பாலிடெக்னிக், கலை, அறிவியல், பொறியியல், மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட 52 கல்லூரி முதல்வர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
Follow Us