சிறுமி பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு 17 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்துமகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Advertisment

வேலூர்மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த கூத்தாண்டகுப்பத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி கருணாகரன். இவர் 2015ல் அதே கிராமத்தை சேர்ந்த 11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். இதுக்குறித்து நாட்றம்பள்ளி காவல்துறையினர் வழக்குப்பதிவு விசாரித்து கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.

Advertisment

child

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

அதன்பின் இந்த வழக்கு வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. குற்றவாளி கருணாகரன் மீது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்த குற்றம் வழக்கு விசாரணையின்போது நிருபிக்கப்பட்டது. அந்த வழக்கின் தீர்ப்பு இன்று ஜீலை 18 ந்தேதி வழங்கப்பட்டது. குற்றவாளிக்கு 17 ஆண்டுகள் சிறைதண்டனையும் ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Advertisment

இதன் அடிப்படையில் காவல்துறையினர் பலத்தபாதுகாப்புடன் குற்றவாளியை கைது செய்து அழைத்து சென்று மத்திய சிறையில் அடைத்தனர்.