Advertisment

இளம் பெண்ணுடன் 17 வயது சிறுவன் தலைமறைவு; போலீசார் விசாரணை

17 year old boy with young woman Police investigation

Advertisment

சேலம் மாவட்டம் மணியனூரைச் சேர்ந்த 17 வயது சிறுவன், அப்பகுதியில் உள்ள வெள்ளிப்பட்டறையில் வேலைக்குச் சென்று வந்துள்ளார். கடந்த 14 ஆம் தேதி காலையில் வழக்கம்போல் வேலைக்குச் சென்ற சிறுவன், இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றம் அடைந்த பெற்றோர், பல இடங்களில் தேடிப்பார்த்தனர். அவன் சென்ற இடம் தெரியவில்லை. அவனுடைய அலைபேசியும் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து அவர்கள், மகனைக் காணவில்லை என சேலம் அன்னதானப்பட்டி காவல்நிலையத்தில் புகார்

அளித்தனர்.

காவல்துறை விசாரணையில், சிறுவன் வேலை செய்து வந்த வெள்ளிப்பட்டறையில் வேலை செய்து வந்த 21 வயதான இளம்பெண்ணும் அதேநாளில் மாயமாகி இருப்பது தெரிய வந்தது. அந்தப் பெண்ணின் கணவரும் தனது மனைவியைத் தேடி வந்துள்ளார். இளம்பெண்ணுக்கும், 17 வயது சிறுவனுக்கும் முறையற்ற தொடர்பு இருந்து வந்ததும், அவர்கள் இருவரும் சேர்ந்தே இருதரப்புக்கும் தெரியாமல் தலைமறைவாகி இருப்பதும் தெரிய வந்துள்ளது.

இந்த வழக்கு குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 21 வயது திருமணமான பெண்ணுடன் 17 வயது சிறுவன் தலைமறைவான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

child police Salem
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe