Skip to main content

17 வருட கோரிக்கை... செவிசாய்க்குமா அரசு...

Published on 16/07/2021 | Edited on 16/07/2021

 

17 year demand ... Will the government listen ...

 

2004ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி கும்பகோணம் ஸ்ரீ கிருஷ்ணா பள்ளியில் சத்துணவு சமையலறையில் ஏற்பட்ட தீ, மேற்கூரையில் பற்றியதில் பள்ளிக் குழந்தைகள் 94 பேர் உயிரிழந்தனர். 13 குழந்தைகள் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவம் தமிழ்நாடு முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்தத் துயர நிகழ்வின் 17ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று (16.7.2021) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, பள்ளி முன்பாக வைக்கப்பட்டுள்ள, குழந்தைகளின் புகைப்படங்கள் முன்பாக மலர்தூவியும், மெழுகுவர்த்திகளை ஏந்தியும் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். 

 

தீ விபத்தில் குழந்தைகளை இழந்த பெற்றோர்கள், பள்ளிமுன்பு வைக்கப்பட்டிருந்த பதாகையின் முன்பு கண்ணீர்விட்டு அழுதபடி மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். அங்கு அஞ்சலி செலுத்தவந்த பெற்றோர்கள் அரசுக்கு ஒரு கோரிக்கையும் வைத்தனர். “94 குழந்தைகள் இறந்து இன்றுடன் 17 வருடங்கள் ஆகின்றன. எங்கள் குழந்தைகளும் இந்நேரம் இருந்திருந்தால் திருமண வயதை எட்டியிருப்பார்கள். முதலாம் ஆண்டு நினைவஞ்சலியில் இருந்து 17ஆம் ஆண்டு நினைவஞ்சலி தினமான இன்றுவரை எங்களுடைய கோரிக்கை ஒன்றுதான். ஜூலை 16-ஐ ‘குழந்தைகள் பாதுகாப்பு தின’மாக அறிவிக்க வேண்டும் என்பதுதான். சென்ற அரசு இதைக் கண்டுகொள்ளவில்லை. இந்த அரசாவது இதற்கு ஆவன செய்ய வேண்டும். இன்னும் இரண்டு மாதத்தில் இதை அறிவிக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது தாக்குதல்; விசாரணையில் வெளியான பகீர் தகவல்! 

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Govt Bus Driver Conductor incident information released in the investigation

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பழைய பாலக்கரை பகுதியில் பந்தநல்லூரில் இருந்து கும்பகோணம் நோக்கி அரசு நகரப் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது 8 பேர் கொண்ட இளைஞர் கும்பல் ஒன்று இந்த பேருந்தை வழிமறித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுட்டனர். மேலும் ஆத்திரமடைந்த இளைஞர்கள் பேருந்துக்குள் சென்று ஓட்டுநரை தகாத வார்த்தைகளால் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஓட்டுநரை பேருந்துக்கு வெளியே இழுத்து வந்து அவரை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இதனை தடுக்க முயன்ற நடத்துநர் மீதும் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். அருகில் இருந்தவர்கள் இதனை தடுக்க முயன்ற போது இந்த இளைஞர்கள் அவர்களையும் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்து தாக்கியுள்ளனர். அதே சமயம் அந்த வழியே வந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள் இருவர் இந்த சம்பவத்தை படம் எடுத்தபோது அவர்களையும் தகாத வார்த்தைகளால் பேசி தாக்க முயன்றுள்ளனர்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மற்றும் இருவர் என 4 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். 6 பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட 8 பேரும் கஞ்சா போதையில் இருந்தனர் என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது.  இத்தகைய சூழலில் மேலும் 4 பேரை  போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

Next Story

டெல்லியில் பயங்கர தீ விபத்து; பொதுமக்கள் பாதிப்பு!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
fire in Delhi Public damage

டெல்லியில் உள்ள காஜிபூர் குப்பைக் கிடங்கில் நேற்று (21.04.2024) மாலை எதிர்பாராதவிதமாக தீப்பிடித்தது. இதனால் தீயில் இருந்து தொடர்ந்து புகை கிளம்பி வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குப்பைக் கிடங்கில் இருந்து விஷவாயு உற்பத்தியாகியதால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக டெல்லி தீயணைப்புத் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். இதுவரை உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் கூறுகையில், “எங்களுக்கு தொண்டையில் எரிச்சல், புகையால் இருமல் வந்தது. இந்த தீயால் மாசு ஏற்பட்டது. இதனால் அனைவரும் அவதிப்படுகின்றனர்” எனத் தெரிவித்தார். மேலும் இது குறித்து உள்ளூரில் ஒருவர் கூறும்போது, “இன்று கண்விழித்து பார்த்தபோது அந்த பகுதி தெளிவாக தெரியவில்லை. சரியாக மூச்சு விட முடியவில்லை. கண்களில் எரிச்சல் ஏற்பட்டது. வெப்பம் அதிகரிக்கும் போது தீ விபத்துகள் தொடரும். அரசு இந்த பிரச்சனையை தீர்க்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் கூறுகையில், “டெல்லி மாநகராட்சியின் அனைத்து அதிகாரிகளும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீயணைப்பு துறையினரும் தொடர்ந்து  தீயை அணைக்கும் பணியில் பணியாற்றி வருகின்றனர். தீ விரைவில் கட்டுக்குள் கொண்டு வரப்படும்” எனத் தெரிவித்துள்ளார். டெல்லி பாஜக தலைவர் வீரேந்திரா சச்தேவா காஜிபூர் குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.