Advertisment

'17 தீர்மானங்கள்; ஜூனில் சுற்றுப்பயணம்?'-உறுதிமொழியுடன் தொடங்கிய தவெக பொதுக்குழு 

'17 resolutions; Tour in June?' - Tvk General Committee begins with a promise

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்று தற்போது சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் மண்டபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. முன்னதாகவே இதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகம் உருவாக்கியுள்ள 120 மாவட்டங்களைச் சேர்ந்த 2,150 தலைமைக் கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டுள்ளனர்.

Advertisment

பொதுமக்களுக்கு போக்குவரத்து நெரிசல் இடையூறு ஏற்படக்கூடாது என்பதற்காக காலையிலேயே நடிகர் விஜய் சம்பந்தப்பட்ட மண்டபத்திற்கு வந்திருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் விஜய் தலைமையில் தற்போது உறுதிமொழி ஏற்புடன் கூட்டம் தொடங்கியது.

Advertisment

இன்று நடைபெறும் பொதுக்குழுவில் தலைவருக்கு அதிகாரம் அளித்தல்; மாநில அரசுகளுக்கான அதிகாரத்தை பகிர்ந்தளித்தல்என பல்வேறுதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும்வக்பு வாரிய திருத்த சட்டத்திற்கு எதிராகவும், பரந்தூர் விமான நிலைய திட்டத்தை எதிர்த்தும்; டாஸ்மாக் முறைகேடு; அரசு ஊழியர்கள் போராட்டம்; இருமொழிக் கொள்கை; சாதிவாரி கணக்கெடுப்பு; பெண்கள் பாதுகாப்புஉள்ளிட்டவை குறித்தும் என மொத்தம் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.

தொடர்ந்து பூத் கமிட்டி மாநாடு, ஜூன் ஆரம்பத்தில் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாகவும் அதற்கான அறிவிப்புகள் இந்த பொதுக்குழுவில் அறிவிக்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

tvk
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe