17 people were bitten by dogs in Pudukkottai  municipal administration caught 50 dogs

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி கடைவீதியில் மாலை நேரத்தில் மக்கள் அதிகம் கூடும் அம்புக்கோயில் முக்கத்தில் ஒரு வெறி நாய் அடுத்தடுத்து பலரைக் கடித்து குதறியது. ரத்தம் சொட்ட சொட்ட மருத்துவமனைக்குச் சென்றனர்.

Advertisment

அதே போலக் கறம்பக்குடி தென்நகர் பகுதியில் ஒரு நாய் வரிசையாக பலரை கடித்து குதறியது. இந்த இரு இடங்களிலும் 17 பேரை நாய்கள் கடித்து மருத்துவமனைக்கு வந்த போது மருத்துவமனை வளாகமே பரபரப்பாகக் காணப்பட்டது. இதில் 12 பேரை மேல்சிகிச்சைக்காகப் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisment

ஒரே ஊரில் சில மணி நேரத்தில் அடுத்தடுத்து 17 பேரை நாய்கள் கடித்த சம்பவம் காட்டுத்தீயாகப் பரவிய நிலையில் பொதுமக்கள் கடைவீதிக்கு வரவே அச்சப்பட்டனர். இந்த நிலையில் கறம்பக்குடி பேரூராட்சி பகுதியில் தெருவில் சுற்றிய நாய்களை பேரூராட்சி நிர்வாகத்தின் மூலம் பிடித்து சுமார் 70 நாய்களை சில வாகனங்களில் ஏற்றிச் சென்று வெளியூர்களில் விட்டுள்ளனர்.