Advertisment

3 மணி நிலவரப்படி 17 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி!

 17 lakh people vaccinated as of 3 pm!

தமிழகத்தில் வாரம்தோறும் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை 'மெகா தடுப்பூசி முகாம்' ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை முதல் தமிழகம் முழுவதும் மூன்றாம் கட்டமாக கரோனா தடுப்பூசி முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

Advertisment

தமிழகம் முழுவதும் சுமார் 20 ஆயிரம் சிறப்பு முகாம்களில் தடுப்பூசிகளைப் போட ஏற்பாடு செய்யப்பட்டது. முகாம்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. மூன்றாவது முறையாக நடந்துவரும் இந்த தடுப்பூசி முகாமில், கோவிட்ஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. முதல் முகாமிலேயே 20 லட்சம் தடுப்பூசிகள் செலுத்த வேண்டும் என வைக்கப்பட்டிருக்க இலக்கை தாண்டி 28 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டிருந்தது. இதற்குத் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்திருந்தார். இரண்டாவது முகாமில் 15 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 16.43 லட்சம் பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்நிலையில் இன்று தொடங்கியிருக்கும் முகாமில் 15 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் மாலை 3 மணி நிலவரப்படி 17.7 லட்சம் பேருக்குதடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

Advertisment

VACCINE corona virus
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe