17 kg of narcotics seized near Puducherry

சிதம்பரம் அருகே புதுச்சத்திரம், பரங்கிப்பேட்டை செல்லும் சாலையில் புதுச்சத்திரம் காவல் ஆய்வாளர் கவிதா தலைமையிலான காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புதுசத்திரத்திலிருந்து பரங்கிப்பேட்டை நோக்கிச் சென்ற நான்கு சக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

Advertisment

அப்போது அதில் 17 கிலோ தடை செய்யப்பட்ட போதை புகையிலை ரூ 50 ஆயிரம் மதிப்பிலான இருந்தது தெரியவந்தது. இதுகுறித்த விசாரணையில் சிதம்பரம் அருகே பொன்னாங்கண்ணி மேடு கிராமத்தை சேர்ந்த பாஸ்கரன் ( 52 ) மற்றும் சிதம்பரம் சி.தண்டேஸ்வரநல்லூர் பகுதியைச் சேர்ந்த ரவி ( 54 ) என்பது தெரியவந்தது. பின்னர் போதை புகையிலை மற்றும் அவர்கள் எடுத்த அந்த கார்களை பறிமுதல் செய்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Advertisment