
ஐபிஎஸ் அதிகாரிகள் 17 பேருக்கு புதிய பணிகளை வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, தென்மண்டல ஐ.ஜியாக இருந்த அன்பு, சென்னை வடக்கு கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை மாநகர காவல் ஆணையராக இருந்த பிரேம் ஆனந்த் சின்ஹா, வடக்கு மண்டல ஐ.ஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நெல்லை மாநகர காவல் ஆணையர் துரைக்குமாருக்கு பதிலாக சந்தோஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை மாநகர காவல் ஆணையராக டி.செந்தில்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். மதுவிலக்கு மற்றும் அமலாக்கத்துறை ஐ.ஜிதுரைக்குமார், பதவி உயர்வு பெற்று ரயில்வே காவல்துறை ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய அரசு பணியிலிருந்து திரும்பிய அஸ்ரா கார்க், தென்மண்டல ஐ.ஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். காவல்துறை விரிவாக்கப்பிரிவு ஐ.ஜியாக மல்லிகா நியமிக்கப்பட்டுள்ளார்.சம்பத்குமார்பதவி உயர்வு பெற்று காவல்துறை நலன்பிரிவு ஐ.ஜியாகநியமனம் செய்யப்பட்டுள்ளார். காவல்துறை செயலாக்கப்பிரிவு ஏடிஜிபியாக பாலநாகதேவி நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஊர்க்காவல்படை ஏடிஜிபியாக ஜெயராம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஐ.ஜி அபின் மொடக் பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Follow Us