திருச்சி மாவட்டம் துறையூர் மதுராபுரி கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன், அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 5ஆம் தேதி விளையாடுவதற்காக வீட்டைவிட்டு வெளியே சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுக்குறித்து மாணவனின் தாயார் துறையூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரில் அதே பள்ளியில் சிக்கந்தம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆசிரியையாக பணியாற்றுகிறார். அவருடன் தனது மகன் சென்றிருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் துறையூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.