சென்னை பெசன்ட் நகரில் தொழிலதிபர் வீட்டில் வீட்டுவேலை செய்துவந்த 17 வயது சிறுமியை தொழிலதிபரின் மனைவி அடித்துக்கொன்ற செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1q5.jpg)
சென்னை பெசன்ட் நகரில் வசித்துவரும் தொழிலதிபர் முருகானந்தம் என்பவரது வீட்டில் வீட்டுவேலை செய்துவந்த 17 வயதான சிறுமி மாதுரிலக்சுமி. இந்த சிறுமியைஏற்கனவே தொழிலதிபர் முருகானந்தம்காஞ்சிபுரத்தில்நடத்திவந்த கேஸ் ஏஜென்சியில் வேலைக்கு அமர்த்தியுள்ளார். அதன் பிறகு காஞ்சிபுரத்திலுள்ள தனது வீட்டிலும் வீட்டு வேலைக்கு வைத்துள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/24_0.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/15_1.jpg)
அதன் பிறகு ஒருவாரத்திற்கு முன்புதான் சென்னை பெசன்ட் நகரிலுள்ள தனது வீட்டிற்கு அதே சிறுமியை வீட்டுவேலைக்கு கொண்டுவந்துஅமர்த்தியுள்ளார். இந்நிலையில் சிறுமி மாதுரிலக்சுமி உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார் என அவரது உறவினர்களுக்கு தகவல் அளித்துள்ளார். ஆனால் அங்குசென்றுபார்க்கையில் சிறுமியின் கை, கால் பகுதிகளில் பலத்த காயங்களுடன் சிறுமி இறந்த நிலையில் இருப்பதை அறிந்துபோலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதன் அடிப்படையில் போலீசார் நடத்திய 10 மணிநேர விசாரணையில் போலிசாரின் கேள்விகளுக்கு முன்னுக்கு பின் முரணாக பதிலளித்த முருகானந்தமும், அவரது மனைவி சவிதாவும் இறுதியில் உண்மையை கூறினர்.
அதவது வீட்டிலுள்ள வளர்ப்பு நாயை வீட்டுவேலை செய்யும் சிறுமி மாதுரிலக்சுமி அடித்ததாகவும் அதனால் ஆத்திரம் அடைந்த தொழிலதிபர் மனைவிசுஸ்மிதா சிறுமியை அடித்தும், சுடு தண்ணீர் ஊற்றியும் கொன்றதாகவும் கூறியுள்ளனர்.
இப்படி வீட்டில் வேலை செய்யவந்த 17 வயது சிறுமியை அடித்துக்கொன்றதற்காகதொழிலதிபர் மனைவி கைதுசெய்யப்பட்டுள்ளார். மேலும் தொழிலதிபரையும் கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்துவருவதாக கூறியுள்ளனர்.
Follow Us