சென்னையில் இருந்து கேரளா செல்லும் ரயிலில் கஞ்சா கடத்த முயன்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.
கேரளா நோக்கிச் செல்லும் ரயிலில் கஞ்சா கடத்தப்பட இருப்பதாக பெரம்பூர் ரயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் அடிப்படையில், ரயில்வே போலீசார் நடத்திய சோதனையில் ஒடிசாவைச் சேர்ந்த ரோகித் டிகால், சமந்தா பிரதான் ஆகிய இருவரிடமிருந்து 16 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.