/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/minister32323.jpg)
சென்னை தலைமைச் செயலகத்தில்தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் இன்று (20/12/2021) மாலை செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அமைச்சர் கூறியதாவது, "பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் மொத்தம் 16,768 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். ஜனவரி 11- ஆம் தேதி முதல் ஜனவரி 13- ஆம் தேதி வரை சென்னையில் இருந்து மொத்தம் 10,300 பேருந்துகள் இயக்கப்படும். ஜனவரி 11- ஆம் தேதி முதல் ஜனவரி 13- ஆம் தேதி வரை சென்னையில் இருந்து ஒரு நாளைக்கு 4,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். பிற ஊர்களில் இருந்து ஜனவரி 11- ஆம் தேதி முதல் ஜனவரி 13- ஆம் தேதி வரை 6,468 பேருந்துகள் இயக்கப்படும்.
கோயம்பேடு, மாதவரம், தாம்பரம், பூந்தமல்லி, கேகேநகர் பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து 4 பேருந்து நிலையங்களுக்கு செல்ல இணைப்பு பேருந்து இயக்கப்படும். பொங்கல் முடிந்து சொந்த ஊர் திரும்ப ஏதுவாக மொத்தம் 16,709 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். சிறப்பு பேருந்துகள் குறித்த தகவலுக்கு 94450- 14450, 94450- 14436 ஆகிய எண்களைத் தொடர்புகொள்ளலாம்.
கோயம்பேட்டில் இருந்து சிறப்பு பேருந்து நிலையங்களுக்கு செல்லும் வகையில் 24 மணி நேரம் மாநகர பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. சாலையோர மோட்டல்களில் உணவின் தரம் குறித்து புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். டெண்டர் பெறப்பட்ட மோட்டல்களில்தான் அரசுப் பேருந்துகளை நிறுத்த முடியும். உணவின் தரம், சுகாதாரப் பிரச்சனைகள் குறித்த புகார்கள் உறுதி செய்யப்பட்டால் டெண்டர் ரத்து செய்யப்படும்"எனத் தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)